search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் கட்டாயம்"

    மருத்துவ கலந்தாய்வின் போது மாணவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #medicalcouncelling #Aadhaarmandatory #ChennaiHC

    சென்னை:

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி அடைபவர்கள் கலந்தாய்வு மூலம் விருப்பப்படும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். 

    இந்நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற கலந்தாய்வின் போது பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் புதுக்கோட்டை மாணவி விக்னயா உட்பட ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மேலும் கடந்தாண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்ட பிற மாநிலத்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறமாநிலத்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் உள்ளது. எனவே ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டவர்களின் பட்டியலை விரைவில் தாக்கல் செய்கிறோம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



    இதையடுத்து, இந்தாண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வின் போது மாணவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து மாணவர்களிடையே தகவல்களை பரப்ப சரியான விளம்பரம் செய்யுமாறும் நீதிபதி அறிவுறுத்தினார். #medicalcouncelling #Aadhaarmandatory #ChennaiHC
    திருப்பதியில் ஒரே நாளில் இலவச தரிசனம் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #tirupati
    திருப்பதி:

    திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) என பல வகையான தரிசன முறை அமலில் உள்ளது.

    இதில் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், காத்திருப்பு அறைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் தரிசன முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், தரிசன டோக்கன் வழங்கப்படும். இதற்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியதாவது:

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட டோக்கன் மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த டோக்கன் முறை தரிசன அட்டை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

    இலவச தரிசனத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    தரிசன நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் முறையானது, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் திவ்ய தரிசனத்திற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tirupati
    ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்துள்ளது. #Aadhaar
    புதுடெல்லி:

    வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரித்து வந்தது.

    ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் சில இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. #Aadhaar
    ×